Send Your Enquiries
Welcome To Purna Vastu Shastram
என்னைப்பற்றி
சுமார் 25 ஆண்டுகளாக தொழில் முறை வாஸ்து ஆலோசகராக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து செயல்பட்டு வருகிறேன். 1500க்கும் மேற்பட்ட புதிய கட்டிடங்களை வாஸ்துமுறைப்படி கட்டியுள்ளதோடு 5000க்கும் மேற்பட்ட பழையகட்டிடங்களை வாஸ்து முறைப்படி மாற்றி அமைத்த அனுபவம் பெற்றுள்ளேன். எந்த வொரு கட்டிடத்தை மாற்றி அமைக்கும் போதும் அதற்கான வாஸ்து காரணங்களை வாடிக்கையாளருக்கு முழுமையாக விளக்கிய பிறகு கட்டுவதை தொழிலின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளேன்.
என்பணியின் தனித்துவம் என்ன?
எந்தவித இடையூறும் இன்றி வீடு கட்டும் பணிகளைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றிட மனைசுத்தி செய்தல், பூமிபூஜை செய்தல், கூரை இடுதல் (roof concrete), வாசற்கால் வைத்தல் போன்ற முக்கிய வீட்டு வேலைகளுக்கு நான் நல்ல நேரம் கணித்து செய்து வருவதால் கட்டிடப்பணிகள் குறித்த படி நடந்துவரும். ஆனால், இவ்வாறு நல்ல நேரம் எடுக்கையில் ஒவ்வொரு கட்டிட வேலைகளைத் தொடங்குவதற்கென்று ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம், திதி, லக்கினம், அதற்கான இடங்களின் சுத்தி, உரிமையாளரின் லக்கினத்திற்கு மற்றும் குறிக்க உள்ள லக்கினத்திற்கு எட்டாம்வீடு, சுக்கிரன் நிலைஎன்ன? என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. மேலும், உரிமையாளரின் பிறந்தநட்சத்திரமும் கணக்கில் எடுத்துக்கொண்டு அன்று அவரின் நட்சத்திற்கு சந்திராஷ்டமோ, படு பட்சியோ உள்ளதா என்பதையும் கவனித்து ஒவ்வொரு கட்டிடவேலையும்தொடங்குகிறேன். ஆனால், இங்கே பெரும்பாலும் முகூர்த்த நாட்களில் உள்ள நல்ல நேரம் எடுப்பதுதான் நடைமுறையில் இருந்துவருகிறது.
திருமணத்திலேயே மங்கலியம் செய்தல், கோடித்துணி எடுத்தல், விவாக முகூர்த்தம், சாந்தி முகூர்த்தம் போன்றவற்றிற்கு என்று தனித்தனி லக்கினங்கள், திதிகள், நட்சத்திரங்கள், நல்ல நேரங்கள் இருப்பது போலவே வீட்டிற்கும் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளாததும் வாஸ்துப்படி செய்யும் வீடுகளும் தடங்கல் ஏற்பட்டு பாதியில் நிற்க காரணமாகின்றன. காலண்டரில் உள்ள வாஸ்து நேரத்தில் மனை கோலுவதில் ஏற்படும் தவற்றை தொடர்புகள் பகுதியில் பத்தி எண்12ல் விரிவாகக்காணலாம்.
வாஸ்து - மனையடி ஒரு ஒப்பீடு
எண்பதுகளின் பிற்பகுதியில் நான் கட்டிட சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்த போது மனையடி சாஸ்திரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1993 வாக்கில் சில புத்தகங்கள் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வெளிவந்தன. மனையடி சாஸ்திரத்தில் நடைமுறைக்கு பொருந்தாத சில கருத்துக்களும் பின்பற்ற சிரமமானதாக இருந்ததாலும் வாஸ்து என்பது ரொம்பவே எளிமையான நடைமுறை கொண்டது என்பதாலும் மனையடி சாஸ்திரம் தற்போது வாஸ்து சாஸ்திரம் என்னும் பெயரிலேயே அறியப்படுகிறது.
நடைமுறைக்கு ஒத்துவராத சில கோட்பாடுகள் மனையடியில் இருப்பது உண்மையே என்றாலும் அது கொண்டுள்ள தன்னிகரற்ற நல்ல நேரம் கணித்தல் , தோஷ மனைகளை கண்டறிதல், ஸ்தானநிலைகள் குறித்த விஷயங்களையும் புறந்தள்ளிகட்டும் கட்டிடத்தில் உயிர்ப்புத்தன்மை இருக்காது. இதை கீழ்கண்ட சிறு ஒப்புமையின்மூலம் ஓரளவுபுரிந்து கொள்ளமுடியும்.
நாம் மேலே கண்டவை போன்று இவற்றுள் இன்னும் பல வேறுபாடுகள் இருந்தாலும் நம் ஆராய்ச்சி மற்றும் அனுபவ அறிவின் காரணமாக மேலே உள்ள ஒப்புமைப்பட்டியலில் பச்சைக்குறியிட்ட விஷயங்கள் நடைமுறையில் நல்ல பலன் அளித்துவருகிறது. எனவேமே லேகண்டது போல் நல்ல விதிகளைக்கைக் கொண்டு செயல்படுத்தி உறுதியான வெற்றி பெற்று வருகிறோம். இதில் மனையடி சாஸ்திரம் நூற்றுக்கணக்கான பழம் பாடல்களைக் கொண்டு விளக்கப்பட்டது என்பதால் கற்பவர் அவற்றை மனனம் செய்யவேண்டியது அவசியம் என்பதோடு, அவர் போதிய ஜோதிட அறிவும் தமிழ் இலக்கண அறிவும் ஆன்மிக அறிவும் பெற்றவராக இருந்தாக வேண்டும். தற்கால வாஸ்து புத்தகங்களை கற்பதற்கு இவை தேவையில்லை என்பதால் வாஸ்து ஆலோசகராவது தமிழ் தெரிந்தால் போதும் என்பதால் மிக எளிதாகிவிட்டது. தற்கால வாஸ்து சாஸ்திரத்தைப்போல் இல்லாமல் மனையடி சாஸ்திரத்தில் நேர்மறை எதிர்மறை சக்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவையே வாஸ்துப்படி அமைக்கப்பட்ட பலவீடுகள் மீண்டும் நம்மிடம் மாறுதல் வேண்டிவருவதற்கான முக்கியகாரணம்.
முறையான அகன்ற ஞானமும், நீண்டகால அனுபவமும் இல்லாத வாஸ்து ஆலோசகர்களால் கட்டப்படும் கட்டிடங்கள் பாதியில் நிற்பதும் , குடியேறிய பின் தொடரும் பாதிப்புகளும் வாஸ்து தோஷங்களுக்கு சாட்சியாகநிற்கின்றன.
வாஸ்துவைக் கையாளும் திறன்
ஒரு தேர்ந்த வாஸ்து ஆலோசகரால் மட்டுமேதம் அனுபவம் வாய்ந்தகையாளும் திறனால் வாஸ்து தோஷமான ஒரு கட்டிடத்தில் சிற்சில மாறுதல்களை செய்வதன் மூலம் மிகப் பெரிய நல்ல பலன்களை பெற்றுத்தர முடியும். இல்லையேல் முக்கிய தோஷங்களை இனங்காண முடியாமல் கட்டிட உரிமையாளரின் பணம், கட்டிட லக்ஷணம் வீணடிக்கப்படுவதோடு நிவர்த்தியும் பெறமுடியாமல் தவிக்கநேரிடும். புதியக ட்டிடங்களைக்கட்டும் போதோ, பழைய கட்டிடத்தில் வாஸ்து தோஷங்களை சரிசெய்ய ஆரம்பிக்கும் போதே எதை முதலில் தொடங்க வேண்டும் என்பதை இனங் கண்டு வரிசைக்கிரமமாக செய்தாலே போதும் வேலை தொய்வின்றி நடப்பதோடு கட்டிடப் பணிகளுக்கான பணத்தேவை ஏதேனும் ஒருவழியில் பூர்த்தியாகி வருவதை அனுபவத்தில் காணலாம்.
வாஸ்துப்படி அமைந்த வீட்டில் இயல்பாக அமையும் நேர்மறை சக்திகள் மனதில் ஒரு வித மகிழ்ச்சியும், நல்லஉறக்கமும் , தானாகத் தோன்றும் அமைதியும் தருவதை அவ்வீட்டில் சிலமணி நேரங்கள் தங்கினாலே உணர முடியும் என்னும் போது அங்கு வசிக்கையில் நம் மனதளவிலும், செய்து வரும் செயல்களிலும் உறவு முறைகளிலும் ஒரு ஒத்திசைவு இழையோடும். ஒரு வாஸ்து அம்சம் பொருந்திய வீட்டை அமைப்பதில் அவசரமோ அசிரத்தையோ காட்டக் கூடாது. அவ்வளவே..!
Completed Vastu Projects :










