Send Your Enquiries
1.என் ஜென்ம ராசிக்கு ஏற்ற தலை வாசல் உள்ள வீடு தான் கட்ட வேண்டுமா?
ஒவ்வொரு ராசிக்காரர்களும் தத்தம் ராசிக்கு ஏற்ற தலைவாசல் (உ.ம்: மகர ராசிக்காரர்கள் தெற்கு வாசல் வீடு ) தான் கட்ட வேண்டும் என்று உறுதியாக இல்லாவிட்டாலும் பரிந்துரையாக சில மனையடி சாஸ்திர ஏடுகள் சொல்லியிருக்கின்றன. நமது அனுபவம் மற்றும் ஆராய்ச்சியில் வாஸ்து நேரங்களை மற்றும் விதிகளை அனுசரித்துக் கட்டப்பட்ட ஆனால் ராசிக்கு ஏற்றதிசையில் தலைவாசல் வைக்காவிட்டாலும் வாஸ்து பலன்களில் ஏதும் மாறுதல்கள் ஏற்படவில்லை என்பதே உண்மை
ஒருவர் தன்னுடைய 35 ஆவது வயதில் தன்னுடைய ராசிக்கு ஏற்றபடி தலை வாசலுள்ள வீட்டைக் காட்டுவதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவரின் மகனுக்கு வயது7 எனவும் கொண்டால் வீடுகட்டி இருபது ஆண்டுகள் அவருக்கு வயது 55 ஆகும் பொழுது அவரின் மகன் வயது 27ஆக இருக்கும். அவர் மகன் இப்பொழுது அவரைவிட அதிகம் சம்பாதிப்பவராக இருப்பார். ஒரு குடும்பத்தில் அதிகம் சம்பாதிப்பவரே சாஸ்திரப்படி (வயதுப்படி அல்ல) அவ்வீட்டின் பெரியவர் எனக் கொள்ள வேண்டும். இப்பொழுது மகனுக் கான ராசிக் கேற்ற தலைவாசல் திசைவேறாக இருக்கலாம். இப்பொழுது அவ்வீடு கட்டி இருபது ஆண்டுகளிலேயே அவ்வீட்டின் முதலாளிக்கு ஏற்றதலைவாசல் இல்லாத போதும் பலன்கள் மாறுவதில்லை என்பது அனுபவத்தில் காணலாம்.
இருப்பினும், ராசிக்கு ஏற்றதிசைகள் கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.
Number | Genma Raasi | Direction of House/Flat |
1 | Aries ( Mesha ) | NORTH |
2 | Taurus ( Vrishabha ) | SOUTH |
3 | Gemini ( Mithuna ) | WEST |
4 | Cancer ( Kark ) | EAST |
5 | Leo (Simha ) | NORTH |
6 | Virgo ( Kanya ) | SOUTH |
7 | Libra ( Tula ) | WEST |
8 | Scorpio ( Vrishchika ) | EAST |
9 | Sagittarius ( Dhanu ) | NORTH |
10 | Capricorn ( Makar ) | SOUTH |
11 | Aquarius ( Kumbha ) | WEST |
12 | Pisces ( Meena ) | EAST |
2. பூஜை அறையை வீட்டின் எங்கே அமைக்கவேண்டும்?
என்னிடம் கேட்கப்படும் கேள்விகளில் இரண்டாவது முக்கிய கேள்வி இது. வடகிழக்கு எனப்படும் ஈசான்யத்தில் பூஜை அறை அமைக்க வேண்டும் என்பதை இணையத்தில் படித்துவிட்டு பூஜை அறைக்கான இடம் தென்மேற்கு என்னும் கன்னி மூலையா அல்லது ஈசான்ய மூலையா என்ற குழப்பமே இதற்கு காரணம்.
வடகிழக்கின் காரகத்துவம் நீர் ஆகும். அதன் எதிர்காரகத்துவம் நெருப்பாகும். பொதுவாக இந்துக்கள் தங்கள் வழிபாட்டில் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி பற்றவைத்து மற்றும் அந்திசந்தி வேளைகளில் விசேஷநாட்களில் என்று தீபம் ஏற்றி நீரின் எதிர்காரகமான நெருப்பைக் கொண்டே வழிபாடு செய்வதால் பணவரவு, முன்னேற்றம், குழந்தைகளின் கல்விமற்றும் அவர்களின் எதிர்காலம் , குடும்ப அமைதி போன்ற ஈசான்யத்தின் நல்ல பலன்கள் குறைத்து வாஸ்து விரோத அமைப்பாக மாறிவிடும்!.
சக்தி குவியும் இடம் மற்றும் மனம் ஒடுங்கும் இடம் பிரம்மஸ்தானம் என்பதால் சற்றொப்ப வீட்டின்மையப்பகுதியான அதை ஆன்மீக சம்பந்தமாக உபயோகிக்க வேண்டும். அடுத்து வாய்ப்பிருந்தால் கன்னிமூலை எனப்படும் தென்மேற்கிலும், வாயு மூலை எனப்படும் வடமேற்கிலும் பூஜை அறை அமைத்துக் கொள்ளவேண்டும். மாற்று மதத்தவராக இருந்து நெருப்பு சம்பந்தமான வழிபாடு செய்யாதவராக இருந்தால் ஈசான்யம் என்னும் வடகிழக்கில் அமைத்துக் கொள்வதில் எவ்விதக் குற்றமும் இல்லை. ஆனால் அவ்வறையின் வடக்கு கிழக்குகளில் ஜன்னல் அமைத்திருக்க வேண்டும்.
3. ஆனிமாதத்தில் புதுவீட்டில் குடியேறக்கூடாதா?
ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் பூமி பூஜை செய்யவோ, வாசற்கால் வைக்கவோ, குடிபுகவோ கூடாது!
4. வீட்டிற்கு வெளியில் துளசி மாடம் அமைக்கும் இடம் எது?
துளசி மாடம் மனையின் வடக்கு அல்லது கிழக்கு ஈசான்யங்களில், கன்னி மூலையில் அமைக்க வேண்டும். மாடத்தின் உயரம் மனையின் மட்டத்திலிருந்து வீட்டின் மட்டம் வரை உள்ள அளவில் மூன்றில் இருபங்கு அல்லது அதற்கும் சற்று குறைவாகவே இருக்கவேண்டும். கருந்துளசி விசேஷமானது. தீட்டு உள்ளவர்கள் நெருங்காமல் இருக்கவேண்டும். முறையாக தூபதீபம் செய்து வரவேண்டும். கன்னி மூலையில் அமைத்தால் வீட்டு மட்டத்தைவிட சற்று உயரமாக அமைத்துக் கொள்ளவேண்டும்.
மேற்கண்ட இடங்களில் துளசி மாடம் அமைப்பது சிரமமானால் வடக்கு வாயவியத்தில் அமைக்கலாம். அங்கும் இவ்விகிதாச்சாரமே கணக்கில் கொள்ள வேண்டும்.
5. பீரோ எங்கே வைக்க வேண்டும்?
பீரோ அல்லது பணப்பெட்டியை தென்மேற்கு அறையில் தெற்கு சார்ந்த தென்மேற்கு அல்லது மேற்கு சார்ந்த தென்மேற்கு பகுதியில் அறை தென்வடல் நீளமாக இருந்தால் வடக்கு பார்த்தபடியும் ,கிழமேல் நீளமாக இருந்தால் கிழக்கு பார்த்த படியும் வைக்கலாம். ஆனால் வீடுதிசைகாட்டிக்கு ஜீரோடிகிரி வடக்கு என்ற அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லாத பட்சத்தில் திசைகாட்டியைக் கொண்டு சற்று ஈசான்யம் பார்க்குமாறு வைத்துக் கொள்ளலாம்.
6.சிலவருடங்களுக்கு முன்பு வாங்கிய மனையில் வடக்கு வடகிழக்கில் தெருக்குத்து உள்ளது. இதுதோஷம் என்கிறார்கள். இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா? விற்று விடுவது நல்லதா?
மேலே காட்டிய வரைபடத்தில் உள்ளபடி மனையில் 8 அதிநேர்மறை தெருக்குத்துக்களும், 8 எதிர்மறை தெருக்குத்துக்களும், 4 நேர்மறை தெருக்குத்துக்களும் ஏற்படும். 8 எதிர்மறை தெருக்குத்துக்களை தவிர்த்து மற்ற பன்னிரண்டும் நல்ல வாஸ்து பலன்களையே தரும் நல்ல அமைப்பாகும். இவற்றில் அந்த 8 அதிநேர்மறை தெருக்குத்துக்கள் மிக உன்னத பலன்களைக் கொடுக்கும். ஒவ்வொரு தெருக்குத்துக்களுக்கும் தனித்தனி பலன்கள் உள்ளன. ஒவ்வொரு தெருக்குத்துக்களும் தன் தன்மைக்கேற்ப நல்ல அல்லது கெட்ட பலன்களை அள்ளித்தரும்.
உங்கள் மனையில் உள்ள தெருக்குத்து மிக நல்ல தெருக்குத்து. மேலும் அதன் சிறப்புத்தன்மையான பணவரவில், பெண்கள்நலனில், அசையும் சொத்துக்களில், நிதி முதலீடுகளில் நல்ல முன்னேற்றத்தையே தரும்.
7.Roof concrete போட நல்ல நேரம் பார்க்க வேண்டுமா?
பூமிபூஜை செய்வது, கூரை இடுவது (Roof concrete), வாசற்கால் வைப்பது, குடிபுகுதல் போன்றவற்றிற்கு அவற்றிற்குரிய நட்சத்திரங்கள், திதிகள் போன்ற விஷயங்களை ஆராய்ந்து நல்லநேரம் பார்த்தே செய்யவேண்டும். சிலர் திருமண முகூர்த்த நாள் மற்றும் நேரத்தையே நல்ல நேரமாக கொள்கின்றனர். அது தவறு.
பூமிபூஜை என்பது பூமியின்சாப, தோஷவிமோசனத்திற்காக குறித்த நேரத்தில் இறைவனை வேண்டுவது.
கூரையிடுவது என்பது வீட்டில் உள்ள நல்லனவற்றை மட்டும் தேக்கிவைக்க போடப்படும் வேலியாகும்.
வாசற்கால் வைத்தல் என்பது வருபவை நல்லவையாக அமைய செய்யப்படும் சடங்காகும்.
குடிபுகுதல் என்பது கட்டிடப்பணி நடந்தகாலத்தில் அதாவது பூமிபூஜை செய்த பிறகு ஏற்பட்ட கண்ணேறு, பொறாமை, தீட்டுக்குற்றங்களை ஹோமம் நடத்தி மாற்று மதத்தவராயின் பிராத்தனை செய்து பிறகு பால் காய்ச்சி தன் வீட்டில் குடியேறிய பின்பு முதல் வேலையை ஆரம்பிக்கும் சடங்காகும். ஆக மேற்கண்ட நான்கு சடங்குகளும் கண்டிப்பாக நல்ல நேரம் பார்த்தே செய்யப்படும். Roof Concrete என்னும் கூரையிடுதல் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் என்ற மூன்று முகட்டு நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் வரும் நாளில் நல்ல நேரம் அறிந்து செய்யப்படும்.
9.என்னுடைய மனைக்கு வடக்கு மற்றும் கிழக்கில் தெருக்கள் இருப்பதால் மனையின் வடகிழக்கில் 7 அடி நீளத்தில் sply வைத்து உள்ளார்கள். எனவே என் மனையின் வடகிழக்கில் 5'x 5'x 7' என்ற முக்கோணப்பரப்பு தெருவுக்கு சேர்ந்ததால் வெட்டப்பட்டுள்ளது. இதுதோஷமா?
corner site எனப்படும் மூலை மனைகளை வாங்கும்போது, வடகிழக்கு மனை இருப்பதிலேயே சிறந்தது என்ற கருத்து உள்ளதால் வாங்கி விடுகிறார்கள். இவ்வாறு sply தந்து பிரிக்கும் மனைகளில் ஈசான்ய மற்றும் கன்னி மூலை மனை எனப்படும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலை மனைகளை எடுக்கவேகூடாது. அம்மனைகளில் வீடு கட்டுவது கூடாது. அவை நிர்வாகத்திறனைக் கெடுப்பதையும், அவ்வீட்டில் ஆண் வாரிசுகளின் சுகத்திற்கும் குடும்ப முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பதையும் காணலாம். Sply வைத்த மனைகளில் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு மூலைமனைகளை எடுக்கலாம்.
9.என்னுடைய மனைக்கு வடக்கு மற்றும் கிழக்கில் தெருக்கள் இருப்பதால் மனையின் வடகிழக்கில் 7 அடி நீளத்தில் sply வைத்து உள்ளார்கள். எனவே என் மனையின் வடகிழக்கில் 5'x 5'x 7' என்ற முக்கோணப்பரப்பு தெருவுக்கு சேர்ந்ததால் வெட்டப்பட்டுள்ளது. இதுதோஷமா?
corner site எனப்படும் மூலை மனைகளை வாங்கும்போது, வடகிழக்கு மனை இருப்பதிலேயே சிறந்தது என்ற கருத்து உள்ளதால் வாங்கி விடுகிறார்கள்.
10.எனக்கு ஏழு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் ஈசான்யத்தில் 22' X 16' X 65' அளவில் கிணறு உள்ளது. தண்ணீர் தேவைக்காக நிலத்தின் தென்கிழக்கில் ஆழ்குழாய்க் கிணறு 800' ஆழத்தில் அமைத்துள்ளேன். அதிலிருந்துதான் தற்சமயம் பாசனத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. நீச்சஸ்தானத்தில் உள்ள போர்வெல் பாதிப்பைத் தருமா ?
வீட்டின்வடக்கு ,கிழக்கு , வடகிழக்கு தவிர வேறு பகுதியில் அமைந்த போர்வெல் அதற்குண்டான கெடுதலான பலன்களைத் தரும்.
மனையின் பரப்பு இரண்டு ஏக்கருக்கு அதிகமானால் மோசமான ஸ்தானத்தில் உள்ள போர் வெல்லின் கெடுதலான பலன்கள் அறவே இருக்காது.
கிணற்றைப் பொறுத்த வரை நிலத்தின் பரப்பு இருபது ஏக்கருக்கு அதிகமானாலும், ஈசான்யத்தில் வேறொரு கிணறு இருந்தாலும் நற்பலன்கள் கிடைக்கும்.
எனவே பாசன நீரை நீச்சபோர் வெல்லில் இருந்து உபயோகித்தாலும் உங்களுக்கு ஈசான்ய கிணறு நற்பலன்தரும்.
11.என் விவசாய நிலத்தில் பயன்படுத்தாத பாழடைந்த கிணறு ஒன்று தென்கிழக்கில் உள்ளது. இது தோசமான கிணறென்றும் அதை மூடவேண்டும் என்றும் சொல்கிறார்கள். மூடலாம் என்றால் சிலர் கங்கையை மூடுவது கூடாது என்கிறார்கள்.. என்னசெய்வது?
முந்தைய பதிலில் சொன்னது போல பரப்பை அனுசரித்தும் உச்சஸ்தானத்தில் வேறு கிணறு உள்ளதா என்பாதை வைத்தே மூடாமல் விட்டு விடலாம் என்றாலும் பயன்படுத்தாத கிணறு என்பதால் மோசமான ஸ்தான கிணற்றை மூடிவிடுதலே நல்லது. ஒவ்வொரு ஆகாத மூலைக் கிணற்றைப் பொறுத்தவரையும் அதற்கென குறித்த நாள்நேரத்தில் குறித்தசாந்தியை செய்தபிறகே மூடவேண்டும். மோசமான கிணறு விதி விலக்கைமீறி இருந்தால் தொடர்ச்சியான தீயபலன்களால் உரிமையாளரை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதால் மூடுவது சிறந்தது. கங்கைக்கும் கிணற்றுக்கு சம்பந்தம் இல்லை. வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மூலைகளில் அமைந்த கிணறுகளை எக்காரணம் கொண்டும் மூடி விடக்கூடாது. எச்சரிக்கை!
12.வாஸ்து நாளில் வாஸ்து நேரத்தில் பூமி பூஜை போடுவது வழக்கமாக உள்ளது. இதுசரியா?
காலண்டரில் தந்திருக்கும் வாஸ்து நேரம் சென்னையின் சூரிய உதயத்தை வைத்து கணக்கிடப்பட்டதாகும். அது சென்னையில் வாஸ்து பூஜை செய்ய சரியானதே தவிர நாட்டின் வேறு பகுதிக்கு அந்த அந்தப்பகுதியின் சூரிய உதயத்தை வைத்து கணிக்கவேண்டும்.
உதாரணமாக,
சென்னையின் வாஸ்து நேரம் கீழ்கண்ட வாறு கணிப்பார்கள்.
2018 ஆம் வருடம் மார்ச் மாதம் 06ஆம் தேதி (மாசி22) சென்னையின்
சூரிய உதயம் : 06.26 (+)
மாசி மாதம் வாஸ்து புருஷன் நித்திரை எழுவது 8 நாழிகை கழித்து
(8 x 24 நிமிடங்கள் = 192 நிமி = 3மணி 12 நிமி ) = 03.12 09.38
வாஸ்து பகவான் விழிப்புடன் இருக்கும்
ஐந்து ¾ நாழிகைகளில் மூன்று ¾ நாழிகைகள்
நல்ல தல்ல என்பதால் அதனையும் கூட்ட 3 X 18நிமி = 00.54
10.32 முதல்
மீதமுள்ள இரண்டு ¾ நாழிகைகளே நல்ல நேரம் என்பதால்
2X 18 நிமி = 00.36
11.08 வரையுள்ள
நேரமே சென்னைக்கு வாஸ்து நேரம் எனப்படுகிறது.
ஆனால், நாம் கோவை மேட்டுப்பாளையத்தில் வாஸ்து நேரம்கணிக்க வேண்டும் என்றால் மேட்டுப்பாளையத்தின் சூரிய உதயம் அறிந்து இவ்விரு இடங்களின் சூரிய உதய வித்தியாசங்களைக் கொண்டு கணிக்க வேண்டும்.
அதாவது, 06.03.2018 அன்று மேட்டுப்பாளையத்தின் சூரிய உதயம் : 06.36 ஆகும். வித்தியாசம் சென்னையை விட 10 நிமிடம் அதிகம். எனவே மேட்டுப்பாளையத்தின் வாஸ்து நேரம். காலை 10.42 முதல் காலை 11.18 வரையாகஇருக்கும்.
வாஸ்து நேரத்தின் 36 நிமிடங்களில் முதல் 18 நிமிடங்களே இன்னமும் சிறந்தவை என்பதால் காலண்டர் வாஸ்து நேரப்படி செய்வது சமயங்களில் அவ்விடத்தின் வாஸ்து நேரத்திற்கு சற்று முன்போ பின்போ மாறி நல்ல பலன் கிடைப்பது தடை படலாம். இது போன்ற காரணங்களாலேயே வாஸ்து நேரப்படி செய்ததாக சொல்லப்படும் கட்டிடங்களும் பணி முடியாமல் பாதியில் நிற்க காரணமாகின்றன.