தொடர்புகள்

எப்பொழுதெல்லாம் வாஸ்து ஆலோசனை பெறவேண்டும்?

1. புதிய காலி மனையை வாங்கும் முன்பு ஒருமனையை (plot) வாங்கும் முன்பு அதன்லே அவுட்மேப் மற்றும் புலவரைபடத்தை (FMB) கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடர்புகொள்ளலாம். லேஅவுட்மேப் இருந்தால் தான் மனையை ஒட்டி இரு தெருக்கள் இருந்தால் அத்தெருக்களின் அகலங்கள் தெரியும் என்பதோடு குறித்த திசையின் தெரு சாஸ்திரப்படி பெரிதாக உள்ளதா எனகண்டறியவும், தெருக்குத்து ஏதேனும் இருந்தால் அதுநல்ல தெருக்கு தாதோசமான தெருக்குத்தா எனக்கண்டறியவும் , மனைக்கு அருகில் கோயில்,குளம், கிணறு போன்றவை இருந்தால் அதன்தூரம் திசைகள் அறிந்து கொள்ளவும் முடியும். மேலும் மனையின் திசையை திசை காட்டியை வைத்து எடுத்த புகைப்படம் , மனையார் பெயருக்கு வாங்கப்பட்ட உள்ளதோ அவர்களின் பிறந்த வருடம்: நாள்: நேரம், இடம் மற்றும் நான் குறிப்பிடும் கோணங்களில் வைத்து எடுத்த புகைப்படங்களுடன் மேற்கண்டவற்றை எனக்கு மெயிலில் அனுப்பி வைத்தால் நான் ஆன்லைன் மூலமாகவே அம்மனை வாஸ்துப்படி உள்ளதா என சொல்லி விடமுடியும்.

2.மனை வாங்கிய பின்பு தம்மிடம் உள்ள வாஸ்துப் படி நன்கமைந்த மனையில் அல்லது நிலத்தில் வீடு அல்லது தொழில் ஸ்தாபங்கள் கட்டத்தொடங்கும் முன்புதாம் விரும்பி வரைந்துள்ள கட்டிட வரைபடத்தை அனுப்பி தாம் உத்தேசித்த மாதிரியான அதேசமயம் வாஸ்துப்படியான கட்டிட வரைபடத்தை ஆட்டோகேட் பிளான் (auto cad plan) மற்றும் pdf அமைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தமது தேவைகள் மற்றும் விருப்பங்களை சொல்லி அதற்கேற்றாற் போல் வாஸ்து வரைபடத்தை மூன்று நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.

3. முக்கிய சடங்குகளுக்கு முன்பு நல்ல நேரம் அறிய
மனைசுத்தி, பூமிபூஜை , ஆழ் குழாய் கிணறு அமைத்தல் ,கூரையிடுதல் (roof fixing ) மற்றும் வாசற் கால் வைத்தல் போன்ற சடங்குகள் செய்வதற்கு ஒருவாரம் முன்பே தொடர்பு கொண்டு அச்சடங்குகளுக்கான நேரம் மற்றும் செய்யும் விதம் போன்றவற்றை அறிந்து கொள்ளவும்.

4. கட்டிட வடிவழகு புகைப்படம் (elevation design photo) பெற்றபின்பு எனது வஸ்துப்படியான கட்டிட வரைபடத்திற்கேற்ற கட்டிட வடிவழகு புகைப்படம் (elevation design photo ) ஏதேனும் பெற்றால் அதை எனக்கு அனுப்பிவைத்து அதில் ஏதேனும் வடிவதோஷம், ஆதிபத்திய தோஷம், குத்தல்தோஷம், லட்சணதோஷம் ( உ.ம் : உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு அனுகூலமற்ற, எதிரிடையான நட்சத்திரங்களின் வடிவங்கள் இடம் பெற்றுள்ளனவா என்பதை பரிசோதித்து அவ்வாறு ஆகாத வடிவங்கள் இருந்தால் அவற்றை ஜென்ம மற்றும் சாதக நட்சத்திரங்களின் வடிவங்களாக மாற்றி அமைத்து வாஸ்து அம்சங்களைக் கூட்டுவதன் மூலம் நல்ல பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.

5.குடியேறியபின்பு வாஸ்துப்படி கட்டிய வீட்டில் குடியேறிய சிலகாலம் கழித்து தம் சௌகர்யத்திற்காக ஏதேனும் தாழ்வாரங்களோ, தொட்டிகளோ, வெளிப்புறக் குளியலறை, கார்ஷெட் போன்றவற்றை அமைக்கும் போது அவை சமயங்களில் மிகப்பெரிய வாஸ்து தோஷங்களை ஏற்படுத்திவிடும் என்பதால் குடியேறிய வீட்டில் எவ்விதமான புது அமைப்பை நிறுவும் முன்பே தெரிவித்து அவை வாஸ்துக்கு உகந்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்
6.6.Flatஆகவாங்கும்போது Flat ஆகவாங்கும் போது அதன்லே அவுட் மற்றும் கட்டிட வரைபடத்தை என்மெயில் முகவரிக்கு அனுப்பி வாஸ்து நிறைகுறைகளை அறிந்து அந்த flatஐ வாங்குவது குறித்து முடிவு எடுக்கலாம்.

7.வில்லா வாங்கும் முன்பு வில்லா என்ற வீடுகளை ஒப்பந்ததாரரிடம் கட்டித்தரக்கோரும் முன்பு அவர்கள் தயாரித்து வைத்திருக்கும் வில்லா வரைபடம், லே அவுட் பிளான் திசைகாட்டிக்கு வில்லா அமையும் மனையின் கோணம் போன்றவற்றை அனுப்பி அவர்களின் பிளான் பெரிதாக மாறாமல் வாஸ்துப்படி மாற்றி அமைக்க தொடர்பு கொள்வது அவசியம்.

8.கட்டிய கட்டிடங்களை வாங்கும்முன் கட்டியவீடுகள் , தொழிற்சாலைகள் , வணிகவளாகங்களை வாங்கும் முன்பு அது தோஷத்தின் காரணமாகவே விற்பனைக்கு வந்திருக்கும் என்பதால் அதனை முடிந்தவரை நான்நேரில் ஆய்வு செய்து அதன் தோஷங்களை நீக்க முடியுமா என்பதை உறுதி செய்த பிறகே வாங்கவேண்டும் என்பதால் அவற்றின் புலவரைபட நகல் , பத்திரநகல் ஆகியவற்றை கைவசம் வைத்துக் கொண்டு தொடர்பு கொள்ளவேண்டும்.

9.வாடகை மற்றும் குத்தகை சொத்துக்களைப் பொறுத்தவரை வாஸ்து விதிகளை அனுசரித்துக்கட்டிய தொழிற்சாலை, வணிகவளாகங்கள் போன்றவற்றில் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு அமரும்போது மேனேஜர் அறை, கமுக்கவழிகள் (silent ways), கல்லாப்பெட்டிகள்(cash counters),வாடிக்கையாளர் காத்திருக்கும் அறை(waiting hall), கழிவறை( rest room),பணியாட்கள் குடியிருப்பு, கொதிகலன்(boilar ),சுத்திகரிக்கும் அறை, மூலப்பொருட்கள் வைக்குமிடம், உற்பத்தியான பொருட்கள் வைக்குமிடம், மதிப்பு கூட்டும் அறை, மின்சார அறை போன்றவற்றை அதனதன் ஸ்தானங்களில் அமைக்கவேண்டும் என்பதால் சுவாதீனம் எடுத்தவுடன் தொடர்புகொள்ளுதல் அவசியம்.

10. குடும்ப சொத்து பாகப்பிரிவினை பொதுவாக குடும்பத்தில் அல்லது கூட்டு சொத்தில் பாகப்பிரிவினை செய்து கொள்ளும்போது இருவரில் ஒருவருக்கு வாஸ்து தோஷமானபாகமே அமையும் என்பதால் யாரொருவருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்து கொண்டால் தங்களில் ஒருவர் பிரிவினைக்குப்பின் கஷ்டப்படுவதைக் காணவேண்டிய துர்பாக்கியம் ஏற்படாது . எனவே வாஸ்துப்படியான பாகப்பிரிவினை செய்து கொள்ள தொடர்பு கொள்வது அவசியம்.

11.பழைய கட்டிடங்களை அகற்றும்போது பொதுவாக புதிய கட்டிடங்களை கட்டுவதற்காக பழைய அல்லது பாழடைந்த கட்டிடங்களை இடிக்கும் முன்னர் எந்தநாளில் இடிப்புப்பணியைத் தொடங்குவது? இந்தப்பகுதியில் முதலில் தொடங்குவது? ஆறு மாதங்களுக்கு மேல் யாரும் வசித்திராத பாழடைந்த வீடாக இருந்தால் இடிப்பதற்கு முன்செய்ய வேண்டிய சடங்கு பற்றிய விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்.

12. விவசாய நிலங்களை வாங்கும் முன் விவசாய நிலங்களை வாங்குவதற்கு முன்பு பத்திரநகல் , சிட்டாநகல், FMB நகல் போன்ற ஆவணங்களோடு வண்டிப்பாதை உரிமை , கிணற்றில் கூட்டு உரிமை, ஆழ் குழாய்க்கிணறுகள், அருகே உள்ள மலைக்குன்றுகள், ஆறுகள், கால் வாய்கள் பற்றிய விவரங்களையும் கைவசம் வைத்துக்கொண்டு தொடர்பு கொள்ளவேண்டும். அப்பொழுது தான் தோஷமுள்ள நிலப்பகுதிகளை, கிணறுகளை (உ.ம்: இருபது ஏக்கர் பூமியில் அரை ஏக்கர் நிலம் மட்டும் கிழக்கு அக்கினி மூலை போன்ற மூலைகளை வளர்ந்திருப்பது அல்லது வடக்கு ஈசான்யம் போன்ற பகுதிகள் வெட்டுப்பட்டோ, கோணமாகக் குறைந்தோ அமைந்திருத்தல் அல்லது அக்கினி மூலைக்கிணறாக இருத்தல் ) குடும்பத்தில் வேறொருவருக்கு எழுதிவைப்பதன் மூலம் மோசமான வாஸ்து தோஷங்களை சரி செய்யலாம்.