Send Your Enquiries
கட்டிடங்கள் மற்றும் காலிமனைகளுக்கான ஆலோசனைகளை மூன்று வழிகளில் தந்துவருகிறேன்.
1.ஆன்லைன்ஆலோசனை
அ.வாஸ்து ஆலோசனைக்காக கைபேசி, ஈமெயில், வாட்சப் மற்றும் வெப்சைட் மூலமாக வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும் போது மனை பற்றிய சுமார் 15 கேள்விகள் கேட்கப்பட்டு விபரங்கள் குறிப்பு எடுத்துக் கொள்ளப்படும்.
ஆ. பிறகு அவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்கள் (அறைகளின்எண்ணிக்கை, அமைப்பு உள்ளிட்டவிபரங்கள்) குறிக்கப்படும்.
இ.வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி வரைந்த பிளான்கள் வைத்திருந்தால் அவற்றை என் ஈமெயில் முகவரிக்கு அனுப்பியபிறகு இயன்றவரை அவற்றின் வடிவம் மாறாமல் 100% வாஸ்துவுக்கு மாற்றித்தரப்படும். உரிமையாளர் பிறந்த இடம், நேரம், நாள், மாதம், வருடம் போன்ற விபரங்கள் கேட்கப்பட்டு முக்கியப்பணிகளுக்கான நல்ல நேரம் குறிக்கப்படும்.
ஈ.காலிமனையோ அல்லது கட்டிடமோ எதுவாயினும் குறிப்பிட்ட சில கோணங்களில் நின்று புகைப்படம் எடுத்து அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
உ. கூடவே, லே அவுட் பிளானை என் ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதைக் கொண்டே மனையின் அமைப்பு, அருகாமை மனைகள் கட்டிடங்கள் பற்றிய விவரங்கள், தெருக்குத்துக்கள்நிலை, கோவில், கிணறு, குளம் போன்றவை இருந்தால் அதன்தூரம் அறிவதன் மூலம் அவற்றின் குத்தல் அறிய முடியும்.
ஊ. காம்பௌண்ட்கேட், கதவுகள், பீரோ, கட்டில் போன்றவை காந்த முள் திசை காட்டியை மனையின் கிழக்கு அல்லது மேற்கு எல்லையில் வைத்து எடுத்த புகைப்படத்தைப் பரிசீலித்தே அமைக்க வேண்டும் என்பதால் நான் சொல்லும் வழிமுறைப்படி திசைகாட்டியை வைத்து எடுத்த இரண்டு புகைப்படங்கள் என் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
எ. வாடிக்கையாளருடனான நீண்ட ஆலோசனைக்குப் பிறகே மேற்கண்ட விஷயங்களை பரிசோதித்து சாம்பிள் பிளான் (SAMPLE PLAN ) அனுப்பப்படும். அதில் அவர் முழுமையாக திருப்தியடைந்த பின்னரே கட்டிடபிளான் அனுப்பப்படும். இது பொதுவாக நீங்கள் காணும் கட்டிட வரைபடமாக இல்லாமல் அறைகள், கதவுகள், ஜன்னல்கள், வென்டிலேட்டர்கள், லோரூப், காம்பௌண்ட்கேட், தண்ணீர்தொட்டி, கழிவுத்தொட்டி போன்றவற்றின் நீல அகல உயர அளவீடுகளுடன் அமைந்திருக்கும். தண்ணீர்தொட்டி, கழிவுத்தொட்டி போன்றவை அமையவேண்டிய ஸ்தானங்கள் முக்கியம் என்பதால் அவை அமைய வேண்டிய தூரங்கள் (பக்கத்துசுவர்களில் இருந்து) குறிக்கப்பட்டிருக்கும். மேலும், மின்சாதன பொருட்கள், தண்ணீர்குழாய் உபகரணங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறிக்கப்பட்டிருக்கும். நம் வாஸ்து பிளானுடன் சாதாரண பிளான்களை ஒப்பிட்டால் அவைவெறும் 60% மட்டுமே இருக்கும் என்பதிலிருந்தே பிளானின் முழுமைத்தன்மை அறியலாம்.
ஏ.கட்டிட வரை படத்தில் புதிய மாற்றங்கள் வேண்டும் என்றால் வாஸ்து விதிகளை அனுசரித்து அவ்வப்போது செய்து தரப்படும்.
ஐ.பழைய கட்டிடங்களை வாஸ்துப்படி மாற்றி அமைக்கையில் மனை மற்றும் கட்டிடம் சம்பந்தமான விபரங்கள் கேட்டறிந்த பிறகு வாடிக்கையாளர்கள் அனுப்புகிற கட்டிட வரைபட நகல்களில் திருத்தங்களைக் குறித்துவிட்டு அவற்றை எழுத்து வடிவிலும் அனுப்பிவிட்டு செல்பேசியில் விளக்கித் தெளிவுபடுத்தப்படும்.
ஒ.கட்டிட வேலை ஆரம்பிக்கும் முன், தொடங்குகையில், நடக்கையில், நிறைவடைந்து ஆறுமாதங்கள் வரையிலும் தொடர்ந்து என் ஆலோசனைகள் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர் என்னுடன் குறைந்தது ஓராண்டு பயணிப்பார்.
2.நேரில்ஆலோசனை
அ. மனை அல்லது கட்டிடத்தை நேரிலேயே ஆய்வு செய்வதை வாடிக்கையாளர்கள் விரும்பும்போதும், சிக்கலான மனை அமைப்பு அல்லது கட்டிட அமைப்பாக இருந்து நேரிலேயே ஆய்வு செய்வது அவசியமானாலும் ஒருவாரத்திற்குள் ஒருநாள் ஒதுக்கிநேரில் மனைக்கு வந்து வாஸ்து பார்த்துதரப்படும். அன்றைய நாளில் மனை பற்றிய விபரங்களை வாடிக்கையாளர்கள் தம்முடன் வைத்திருக்கவேண்டும். மனை மற்றும் விபரங்களை ஆராய்ந்து மனை அமைப்பது பற்றிய விபரங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து வழக்கமான நடைமுறைப்படி வாஸ்து பிளான் வரையப்படும்.
ஆ. நான் நேரில் இடத்தை பார்க்கும் போது புறச்சூழல்கள் , திசைகாட்டிக்கு மனையின் திருப்பம், மண்ணின் தன்மை போன்றவற்றை குறிப்பெடுக்க வாய்ப்பு ஏற்படும்
இ. வெளிநாட்டு மற்றும் வெளிமாநில (ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் மேல்) வாடிக்கையாளர்களுக்கு நேரில் ஆலோசனை அளிக்க இயலாது.
3.அலுவலகஆலோசனை
கட்டிட பிளான்களில் உள்ள சந்தேகங்களை தெளிவு செய்து கொள்ள அலுவலக ஆலோசனைக்கு வருவதாக இருந்தால் முன்னர் செல்பேசியில் தொடர்பு கொண்டு நாள் மற்றும் நேரத்தை பெற்றுக் கொண்டு வரவேண்டும். ஒரு வாரத்திற்குள் ஒருநாள் ஒதுக்கப்படும். அப்பொழுது தேவைப்படும் விபரங்களை மறவாமல் கையில் கொண்டு வரவேண்டும்.
கட்டிட பிளான்களில் உள்ள சந்தேகங்களை தெளிவு செய்து கொள்ள அலுவலக ஆலோசனைக்கு வருவதாக இருந்தால் முன்னர் செல்பேசியில் தொடர்பு கொண்டு நாள் மற்றும் நேரத்தை பெற்றுக் கொண்டு வரவேண்டும். ஒரு வாரத்திற்குள் ஒருநாள் ஒதுக்கப்படும். அப்பொழுது தேவைப்படும் விபரங்களை மறவாமல் கையில் கொண்டு வரவேண்டும். வில்லா போன்ற வீடுகளை செய்பவர்களாக, ப்ரொமோட்டர்கள் போன்ற ஒப்பந்ததாரர்கள் மூலம் வீடு செய்ய உள்ளவர்கள் அவர்கள் செய்துதர இருக்கும் மாதிரி வரைபடமும் கொண்டு வரவேண்டும். அலுவலக ஆலோசனையை தேர்வு செய்து அலுவலகத்திற்கு வருபவர்கள் வாஸ்துவில் ஒரளவு தேர்ச்சி பெற்றிருந்தால் அது சிறப்பாக இருக்கும்.
வாஸ்து கட்டணங்களைப் பொறுத்தவரை
அ. விலைக்கு வாங்க உள்ள மனையை அல்லது FLOT ஐசாஸ்திரப்படி தேர்ந்தெடுக்க அல்லது லேஅவுட்டில் உள்ள மனைகளில் இன்னும் சிறப்பான வாஸ்து அம்சங்கள் உள்ள விற்பனையாகாத மனைகளைத் தேர்ந்தெடுக்கவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கட்டிடத்தை தெரிவு செய்யும் வரை அல்லது ஆறுமாதம் வரை முதல் முறை வசூலிக்கப்பட்ட கட்டணத்தைத் தவிர வேறுகட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
ஆ. வாஸ்து பிளானுக்கான கட்டணம் கட்டிடத்தின் பரப்பு மற்றும் மாடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும்.
இ. பழைய கட்டிடங்களை வாஸ்து முறைப்படி மாற்றி அமைக்கையில் மனை மற்றும் கட்டிடம் சம்பந்தமான விபரங்கள் கேட்டறிந்த பிறகு வாடிக்கையாளர்கள் அனுப்புகிற கட்டிட வரைபட நகல்களில் சிவப்பு மையால் திருத்தங்களை எழுதி வாடிக்கையாளர்களின் ஈமெயிலில் அனுப்பிவிட்டு, பிளானில் காணப்படும் வாஸ்து தோஷவிபரங்கள், அதனால் நடந்து வரும் பலன்கள், திருத்தங்களினால் ஏற்படவுள்ள நற்பலன்கள், செய்தே ஆகவேண்டிய திருத்தங்கள், கடும் தோஷமற்ற ஆனால் பெரிய செலவு வைக்கும் தோஷங்கள் போன்றவற்றை எழுத்துவடிவிலும் அனுப்பிவிட்டு கைபேசியில் விளக்கித் தெளிவுபடுத்தப்படும். இதற்கான கட்டணம் கட்டிட விஸ்தீரணம் மற்றும் மாடிகளின் எண்ணிக்கையைப் பொருத்துத் தீர்மானிக்கப்படும்.
ஈ. நேரில் ஆய்வு செய்ய வரும் போது அலுவலகத்திலிருந்து மனை அமைந்துள்ள தூரத்தைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.
இக்கட்டணம் தனியானது. இது பிளானுக்கான கட்டணத்தில் குறைக்கப்பட மாட்டாது. வாடிக்கையாளர்களின் சம்மதத்திற்குப் பிறகு என் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரம் அனுப்பப்படும். கட்டணம் வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்பட்ட பிறகு மூன்று நாட்களுக்குள் பிளான் மற்றும் ஆலோசனைகளும். ஏற்கனவே பதிவாகியுள்ள முன்பதிவைப் பொறுத்து ஒரு வாரத்திற்குள் நேரில் ஆலோசனை வழங்குவதற்கான அல்லது அலுவலக ஆலோசனை பெறுவதற்கான நாளும் நேரமும் உறுதிப்படுத்தப்படும்.



Completed Vastu Projects :










Completed Vastu Projects :










